61. முகவரியில்லா முகம் | EMPTY FACE
Description
இருள்மயமான எதிர்காலம் அவனுள்ளத்தில்
எழுந்து வருகின்றன.
இருமலைகளினிடையே தொங்கும் பாலம்
அவன்பார்வையில் படுகின்றது.
இருமுனைகளும் கட்டப்படாத ஊஞ்சலில்
அவன்ஆடுவது அறிவில்தெரிகின்றது.
இருப்புப்பாதை நீண்டுசென்றுஅவன்துயர்தனை
நினைவுப் படுத்துகின்றது.
இருகரங்களைத் தட்டியபோதும் ஓசை
எழும்பாததை செவியறிகின்றது.
இருண்டநிலவு குடிகொண்டுள்ள இடம்
அவன்கண்களில் தெரிகின்றது.
இருமுட்கள் இல்லாத கடிகாரம்அவன்
காலத்தைக் கணிக்கின்றது.
இருதயம்இல்லா மனிதர்கள் அவனிடம்
ஒதுங்கிச்செல்வது புரிகின்றது.
இருக்கையின்றி அவன்அமர முயலும்
முட்டாள்தனம் தெரிகின்றது.
இருகைகளையும் கட்டிக் கொண்டுஅவன்
பூத்தொடுப்பது புரிகின்றது.
இருண்டமனம்வேண்டாதுஇருமனம்வேண்டுவதை
அவன்மனம் அறிகின்றது.
வந்ததுயரை தாங்கஒன்று நொந்தவாழ்வை
எதிர்க்க மற்றொன்று.
தன்வயிற்றுப் பசிப்பிணிபோக்கும் போராட்டத்தில்
வந்துபோகும் அவன்கண்ணீருக்கு























